உள்ளூர் செய்திகள்

சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம்

Published On 2023-11-15 07:58 GMT   |   Update On 2023-11-15 07:58 GMT
  • புன்னம்சத்திரம் பகுதியில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது
  • சாக்கடையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கரூர், 

கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பஸ் நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பல கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டு சாலையின் இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.

ஆனால் வடிகால் பணிகளை முறையாக பராமரிக்காமல் தனி நபர்கள்வடிகாலின் இடையில் கான்கிரீட் மற்றும் மணல்களை கொட்டி வைத்து அடைத்து விடுகின்றனர்.

இதனால் கழிவுநீர் வெளியே செல்லாமல் நீண்ட நாட்களாக சுமார் 3 அடி முதல் 5 அடிவரை தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவு நீரில் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் ,மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சுகாதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறையினர் சாக்கடையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் .

இது குறித்து மாவட்ட கலெக்டர், ஒன்றிய ஆணையர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சுகாதாரத் துறைக்கு, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே தற்போது அதிகப்படியான டெங்கு காய்ச்சல் ஏற்படுவதால் பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் மூடி கிடக்கும் சாக்கடை கழிவு நீர்வடிகால் வசதியை சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News