வேலாயுதம்பாளையம் பகுதியில் -வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
- வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
- புகளூர் தாசில்தார் முருகன் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
வேலாயுதம் பாளையம்
கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளான சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி மாற்றம்,திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் படிவம் 6, வடிவம் 7, படிவம் 8 போன்றவற்றில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் ,முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினர்.
சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.புகளூர் தாசில்தார் முருகன் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.