கரூர் வள்ளுவர் அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு குறித்து தொழில் நுட்ப பயிற்சி
- கரூர் வள்ளுவர் அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு குறித்து தொழில் நுட்ப பயிற்சி நடை பெற்றது.
- ஆடை வடிவமைப்புத்துறை பேராசிரியர் மரியா பெலிக்ஸ் மாணவர்களுக்கு நவநாகரீக தொழில் நுட்பம் குறித்தபயிற்சி அளித்தார்.
கரூர் :
கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் ஆடை வடிவமைப்புத்துறை சார்பில் நவநாகரீக தொழில் நுட்பம் குறித்த நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வள்ளுவர் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் வின்சென்ட் வரவேற்றார். ஆடை வடிவமைப்புத்துறை பேராசிரியர் மரியா பெலிக்ஸ் மாணவர்களுக்கு நவநாகரீக தொழில் நுட்பம் குறித்தபயிற்சி அளித்தார். இதில் ஆடை வடிவமைப்புத்துறை மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பின்னல் ஆடை மற்றும் நவநாகரீக ஆடைகளான டி&சர்ட், ஜீன்ஸ், சர்ட், லெகங்கா, சாய்வார், கிட்ஸ் வியர் மற்றும் ஹோம் டெக்ஸ்டைல்ஸ், நேப்கின், டவல், ஆப்ரூன், குர்தின் போன்றவற்றின் வரைபட விளக்கங்களும் மற்றும் போர்ட்பேர்லியோ உருவாக்கும் பயிற்சியையும் பயிற்றுவித்தார்.
முடிவில் கல்லூரி ஆடை வடிவமைப்புத்துறை தலைவர் நதியா நன்றி கூறினார்.