- புன்னம் சத்திரத்தில் 2 மணி நேரம் சிலம்பு சுற்றி மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்தனர்
- மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் , சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் பொன்னும் சத்திரம் சேரன் பள்ளி வளாகத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 92 -வது பிறந்த நாளை முன்னிட்டு சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் நிறுவனர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்து சிலம்பு சுழற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்து வயதுக்கு மேல் உள்ள 550-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்ஐஸ் கட்டி மீது நின்று சிலம்பம் சுற்றுவது, சைக்கிளில் சுற்றிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது, கண்ணை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது, பானையின் மீது நின்று கொண்டு சிலம்பம் சுற்றுவது, முட்டை அட்டியின் மேல் நின்று சிலம்பம் சுற்றுவது, ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றுவது என சுமார் 2 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பதக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட சிலம்பம் சங்கத்தின் தலைவர் சுரேஷ், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் கார்த்திக், எக்ஸ்போ பிரைட் கிளை மேலாளர் சிவக்குமார் , கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வீரதிருப்பதி, பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் ஆசான் சௌந்தரராஜன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் , சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.