உள்ளூர் செய்திகள்
கோழிகளை திருடிய வாலிபர் சிறையில் அடைப்பு
- பள்ளபாளையத்தில் கோழிகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
- கோழிகளை திருடும் போது செல்போனை விட்டு சென்றதால் மாட்டிக்கொண்டார்
கரூர்,
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள பள்ளபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்(வயது 60). இவர் தனது தோட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 3 கோழிகளை காணவில்லை என பக்கத்தில் தேடி உள்ளார். அப்போது கோழிக்கூண்டு அருகில் ஒரு செல்போன் இருந்துள்ளது. இதுபற்றி சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சின்னதாராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி சம்பவ இடத்திற்கு சென்று செல்போன் உரிமையாளர் பள்ளபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த பிரசாத்(31) என்பவரிடம் விசாரணை செய்தார். இதில் கோழிகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரை குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.