- கரூரில் நாளை முழு கடையடைப்பு நடைபெற உள்ளது
- ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து
கரூர்:
ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து கரூர் மாவட்டத்தில் அரிசி ஆலைகள், கடைகள், மளிகை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், மண்டி கடைகள் நாளை முழு கடையடைப்பு செய்கின்றன. மத்திய அரசு அத்தியாவசிய உணவு பொருளான அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதித்திருப்பது சாமான்ய மககளை பாதிக்கும் என்பதனை கருத்தில் கொண்டு அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இதனை வலியுறுத்தி கரூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம், கரூர் நகர உணவு பொருள் வணிகர்கள் சங்கம், உணவு தானிய மண்டி (வணிக வளாகம்) கரூர், கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் சார்பில் அரிசி ஆலைகள், அரிசி மொத்த, சில்லரை வியாபாரங்கள், மளிகை கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், தானிய மண்டி (வணிக வளாகம்) ஆகிய நிறுவனங்கள் நாளை (16-ந் தேதி) ஒரு நாள் முழு கடை அடைப்பு செய்வதாக அறிவித்துள்ளன.