உள்ளூர் செய்திகள்

குளித்தலையில் ரூ.1 கோடி மதிப்பில் திட்ட பணிகள் தொடக்கம்

Published On 2023-10-08 06:51 GMT   |   Update On 2023-10-08 06:52 GMT
  • 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையம்
  • குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தொடங்கி வைத்தார்

குளித்தலை, 

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட கணேசபுரத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டிடமும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புத்தூர் ஊராட்சி பகுதிகளான வேங்கடத்தான் பட்டியில் புதிய நாடக மேடையும், சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஆதனூரில் புதிய நாடக மேடையும், வேப்பங்குடியில் 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையமும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ள பாளையம் ஊராட்சியில் காந்தி நகர் காலனியில் புதிய நாடக மேடையும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.பேட்டையில் புதிய நாடக மேடையும் கட்டுவதற்கான பூமி பூஜையை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கி வைத்தார், தொடர்ந்து சிவாயப் ஊராட்சி வேப்பங்குடியில் 15 வது நிதி குழு அடிப்படை மானியத்தில் கட்டப்பட்ட தானிய கிடங்கு அமைத்தல், பெருமாள் பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் திறந்து வைத்தார்.

விழாவில் கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், தோகைமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், விவசாய அணி துணை அமைப்பாளர் சசிகுமார், மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர், மருதூர் பேரூராட்சி அலுவலர் சரவணன், நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், புத்தூர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சந்திரன், சிவாயம் ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி, ஊராட்சி செயலாளர் அருள், கே.பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி கதிர்வேல் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News