மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டிகள்;மாணவ-மாணவிகள் நடனம் ஆடி அசத்தல்
கரூர்,
தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங் களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்தி றன்களை வெளிக்கொண்டு வரும் விதமாகவும், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடு களின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட் டங்களை ஒருங்கிணைக்கும் நோக்கோடு கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.
அந்தவகையில் 2023-24-ம் கல்வியாண்டில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்ற மாவட்ட அள விலான கலை திருவிழா போட்டியில் 4,149 மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனம், ஓவியம் மற்றும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து போட்டி களை தொடங்கிவைத்து பேசினார்.
அப்போதுஅவர் தெரிவித்ததாவது:-
மாவட்டத்தில் உள்ள, 279 அரசு, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும், 46,193 மாவட்ட மாணவர்களில் அளவிலான கலை திருவிழா போட்டி களில், 4,149 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவில் நடை பெறும் போட்டியில், முதல் இடம் பெறும் மாணவர்கள், மாநில அளவில் நடை பெறும் போட்டிகளில் கலந்து கொள்வர். மேலும், மாநில அளவிலான போட் டிகளில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உள்ளனர்.
கலைத்திருவிழா போட்டிகளை, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த வேண்டும். அப் போதுதான் மாணவர்களின் திறமை களை நன்கு அறிய உதவும் என்றார்.
நிகழ்ச்சியில், எம். எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மணிவண்ணன், கரூர் ஆர். டி.ஓ. ரூபினா உள்பட பலர் பங்கேற்றனர்.