உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் கொடை விழா
- முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளி கொடை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், சந்தன கருப்பசாமிக்கும் சந்தனகாப்பு அலங்காரம் செய்து சைவ படைப்பு போட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளி கொடை விழாவை முன்னிட்டு சிறப்புப் பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி காலை 8 மணிக்கு மஞ்சள், பால், குங்குமம், பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், சந்தன கருப்பசாமிக்கும் சந்தனகாப்பு அலங்காரம் செய்து சைவ படைப்பு போட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார்.
விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.