உள்ளூர் செய்திகள்

கண்ணை கவரும் வகையில் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள பிரம்மகமலம் பூ.

கொடைக்கானல் : பிரையண்ட் பூங்காவில் பூத்துகுலுங்கும் பிரம்ம கமலம் பூ

Published On 2023-04-18 06:39 GMT   |   Update On 2023-04-18 06:39 GMT
  • கோடைசீசன் காலங்களில் பூக்கும் பிரம்மகமலம் நாற்று பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டது.
  • பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள இந்த பிரம்ம கமலபூவை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் உயர்ந்து காணப்படும் மரங்களும், கண்ணுக்கு விருந்த தாக காட்சியளிக்கும் மலைமுகடுகளும் தலை தட்டும் மேககூட்டங்களும் இதமான தட்பவெப்ப நிலையும் சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தேர்வுகள் முடிந்து தொடர் விடுமுறை காரணமாக கொடை க்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து ள்ளனர். கோடைகாலம் என்பதால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமானோர் கொடைக்கானலுக்கு வந்து இயற்கை கொஞ்சும் எழிலை அனுபவித்து செல்கின்றனர்.

இவர்களை கவரும் வகையில் கோடைசீசன் காலங்களில் பூக்கும் பிரம்மகமலம் நாற்று பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த பூ பூக்கும். பிரம்மகமலபூ பகல் நேரங்களில் மொட்டாகவும், இரவில் மட்டுமே பூக்கும் தன்மையும் கொண்டது.

பூக்கும் நாட்களில் இருந்து 2 வாரங்களுக்கு பிரம்மக மலம் பூத்திருக்கும். கொடை க்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள இந்த பிரம்ம கமலபூவை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். சிலர் பூவின் அருகே நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணை கவரும் வகையிலும் இந்த பிரம்மகமலபூ இருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தெய்வத்தன்மை நிறைந்த இப்பூ பிரம்மாவிற்கு உகந்த பூவாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News