உள்ளூர் செய்திகள்

ஒப்பிலியப்பன் கோயிலில் கோரதம் புறப்பாடு நடந்தது. (உள்படம்: சிறப்பு அலகாரத்தில் அருள்பாலித்த பெருமாள்- தாயார்).

புரட்டாசி பெருவிழாவை யொட்டி ஒப்பிலியப்பன் கோயிலில் கோரதம் புறப்பாடு

Published On 2023-09-25 10:07 GMT   |   Update On 2023-09-25 10:07 GMT
  • ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாஜலபதி சாமி கோவிலில் புரட்டாசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
  • 9-ம் நாள் உற்சவமான இன்று காலை ரதா ரோஹனம் கோரதம் புறப்பாடு நடைபெற்றது.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாஜலபதி சாமி கோவிலில் புரட்டாசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியான நேற்று காலை வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது.

இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பெருமாள்- தாயார் தோழிக்கினியான் அலங்காரத்தில் எழுந்தருளினர்.

அதனைத் தொடர்ந்து, 9-ம் நாள் உற்சவமான இன்று காலை ரதா ரோஹனம் கோரதம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னர், அகோராத்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து, மாலை உற்சவர் திருவடி திருமஞ்சனம் நிகழ்ச்சியும், நாளை காலை மூலவர் திருமஞ்சனம், மதியம் அன்னபாவாடை உற்சவம், மாலை புஷ்ப யாகம் சாற்று முறை, இரவு சப்தாவரணம் புறப்பாடு நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சாந்தா, அறங்காவலர் குழு தலைவர் மோகன், அறங்கா வலர்கள் ராஜேந்திரன், வெங்கடேசன், இளங்கோவன், மகேஸ்வரி மற்றும் பொறுப்பாளர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News