இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
- கிருஷ்ணர் மண் உண்ட லீலையை மாணவ-மாணவிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
- மழலையர் பிரிவு மாணவ- மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து உலா வந்தனர்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. மாணவி ஸ்வேதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். மாணவி காளிபிரியா பரதநாட்டிய நடனமாடினார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ண லீலைகளில் ஒன்றான கிருஷ்ணர் மண் உண்ட லீலையை மாணவ-மாணவிகள் தத்ரூபமாக நடித்து காட்டினர். இதில் மழலையர் பிரிவு மாணவர் ரித்விக் விஸ்வா கிருஷ்ணராகவும், மாணவி குங்கும காயத்ரி யசோதாவாகவும் வேடமணிந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவி மிருதுளா ஜெனனி குழுவினர் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா என்ற பாடலுக்கு நடனமாடினர். மழலையர் பிரிவு வகுப்பு மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் மற்றும் ராதை போல் வேடமணிந்து உலா வந்தனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியைகள் மஞ்சுளா, பார்வதி ஆகியோர் மாகோலமிட்டு பள்ளியை அலங்கரித்தனர். மாணவி ரட்சனா நன்றிகூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.