கோவில்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு - கடம்பூர் ராஜூ வழங்கினார்
- கிருஷ்ணர் வேடமணிந்து மாணவ- மாணவிகள் கிருஷ்ணன் குறித்த பாடல்கள் பாடினர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ஹவுசிங் போர்டில் உள்ள பிருந்தாவனம் தியான பீடத்தில் உள்ள சந்தான கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கிருஷ்ணர் வேடமணிந்து மாணவ- மாணவிகள் கிருஷ்ணன் குறித்த பாடல்கள் பாடினர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ந்து பிருந்தாவன் குழுவினர் மற்றும் தனலட்சுமி குழுவினரின் பஜனைகளும், சர்மிளா, சரண்யாவின் பக்தி பாடல்களும் நடைபெற்றது. சந்தான கிருஷ்ணருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் அணி வடக்கு மாவட்டச் செயலர் சிவபெருமாள், நிர்வாகிகள் சங்கர்கணேஷ், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை ப்பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் செல்வகுமார், செண்பகமூர்த்தி, குமார், நீலகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.