உள்ளூர் செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,பிரதமர் மோடி(கோப்பு படம்)

பிரதமர் மோடி நினைத்திருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்- கே.எஸ்.அழகிரி

Published On 2022-10-25 21:24 GMT   |   Update On 2022-10-25 21:24 GMT
  • இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கையால் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார்.
  • பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இறுதி தீர்ப்பல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துறை. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ​​அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி. இதனால்தான் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். 


அதேபோல், பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி செயல்பட்டிருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News