உள்ளூர் செய்திகள்

கோல போட்டியில் முதல் இடம் பிடித்த பானுப்பிரியா ராஜேஷ்க்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

பிளாஸ்டிக் இல்லா கோலப் போட்டியில் முதல் இடம் பிடித்த பெண்ணுக்கு பாராட்டு

Published On 2022-12-22 10:08 GMT   |   Update On 2022-12-22 10:08 GMT
  • வீட்டின் முன்பு பிளாஸ்டிக் இல்லா தஞ்சை மாநகராட்சி என்ற தலைப்பில் கோலங்கள் வரைந்திருந்தனர்.
  • சிறந்த கோலத்தை தேர்வு செய்து சால்வை அணிவித்து கௌரவித்து பரிசு வழங்கினார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலம் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி இன்று தஞ்சை 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி சிவக்குமார் தலைமையில், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் பொன்னர், கண்காணிப்பாளர் ராஜா மற்றும் தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த கோல போட்டியினை நடத்தினர்.

இந்த கோல போட்டியில் பொதுமக்கள் தங்களது வீட்டின் முன்பு பிளாஸ்டிக் இல்லா தஞ்சை மாநகராட்சி என்ற தலைப்பில் கோலங்கள் வரைந்திருந்தனர்.

அதில் முதல் இடத்தை பிடித்த தஞ்சை 42 -வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீ செங்கமல நாச்சி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆர். பானுப்பிரியா ராஜேஷ்க்கு, 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைவாணி சிவக்குமார் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

மேலும் கோலப்போ ட்டியில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்க ளுக்கும் பரிசு வழங்கப்ப ட்டது.

Tags:    

Similar News