குமாரபாளையம் போலீசார் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
- அரசு பள்ளியில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருவதுடன் இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
- மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அரசு பள்ளியில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருவதுடன் இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் குமாரபாளையம் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு, தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஓவியப்போட்டி வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி பரிசுகள் வழங்கினர்.
பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. விடியல் பிரகாஷ், தீனா, இல்லம் தேடி கல்வி பயிற்றுனர்கள் சித்ரா, ஜமுனா உள்பட பலர் பங்கேற்றனர்.