உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் பொதுமக்களை கவர்ந்த கும்மியாட்டம்
- கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள், பெண்கள், ஆண்கள் ஆடினர்.
- ஏராளமான பொதுமக்கள் கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அங்காள அம்மன் கோவிலில் வெற்றிவேல் முருகன் கும்மியாட்ட குழுவினர் 60 நாள் கும்மியாட்ட பயிற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள், பெண்கள், ஆண்கள் ஆடினர். முருகன் -வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடி கும்மியாட்டம் ஆடினர். ஏராளமான பொதுமக்கள் கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.