மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
- மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
- பவுர்ணமியான இன்று மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.
விழுப்புரம்:
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை நடைபெற ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி பவுர்ணமி யான இன்று மேல்மலை யனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை அமைச்சர் செஞ்சிமஸ்தான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்கு–மார், உதவி ஆணையர் ஜீவானந்தம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிர–மணியன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர் யசோதரை, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், அறங்காவலர்கள் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராம லிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.