உள்ளூர் செய்திகள் (District)

விளக்கு பூஜை நடந்தது.

தான்தோன்றீஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை

Published On 2022-08-06 09:54 GMT   |   Update On 2022-08-06 09:54 GMT
  • அகத்திய முனிவருக்கு சிவன் திருமண கோலத்தில் காட்சியளித்த தலம்.
  • உலக நன்மை வேண்டியும், வாழ்வில் சுபிட்சமடையவும், திருமண தடை விலகவும் விளக்கிற்கு பெண்கள் மஞ்சள், குங்குமமிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

தரங்கம்படி:

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடிமாத 3-வது வெள்ளியை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், வாழ்வில் சுபிட்சமடையவும் நுற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கிற்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வாள் நெடுங்கண்ணி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் ஒன்றான இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அகத்திய முனிவருக்கு சிவன் திருமண கோலத்தில் காட்சியளித்த தலம். பல்வேறு சிறப்புகளையுடைய இங்கு ஆடிமாத 3-வது வெள்ளியை முன்னிட்டு வாள்நெடுங்கண்ணி சன்னதியில் அம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், வாழ்வில் சுபிட்சமடையவும், திருமண தடை விலகவும் திருவிளக்கிற்கு பெண்கள் மஞ்சள் குங்குமம் இட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். முன்னதாக வாள் நெடுங்கண்ணி உடனுறை தான்தோன்றீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

இதேபோல் பொறையார் குமரக்கோவிலில் திருவிளக்கு பூஜைசெய்தனர். மயிலாடுதுறை மூவலூர் மார்க்கசகாய சுவாமி கோவிலில் கவுமாரி துர்க்கா பரமேஸ்வரிக்கு 33ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் கிராமம் செழிக்கவும் வாழ்வு ஒளிபெறவும் வழிபட்டனர். முடிதிருச்சம்பள்ளி அங்காளபரமேஸ்வரி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Tags:    

Similar News