உள்ளூர் செய்திகள்

அந்தியூர்-பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

Published On 2024-08-15 07:32 GMT   |   Update On 2024-08-15 07:32 GMT
  • பாலம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.
  • கனரக வாகனம் நீண்ட வரிசையில் நின்றுள்ளன.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பொழிந்தது. நள்ளிரவு 2 மணி வரை பொழிந்த இந்த மழையால் செலம்பூர் அம்மன் கோவிலில் இருந்து எண்ணமங்கலம் செல்லும் பாதையில் பேச்சுப்பாறை பாலம் காற்றாற்று ஓடை நீரால் ஏற்கனவே உடைந்திருந்த நிலையில் இருசக்கர வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு இருந்த பாலம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

எண்ணமங்கலம் கிராமத்தில் 2 வீடுகளில் தண்ணீர் புகுந்திருந்தது. விடிய ற்காலை 4 மணி அளவில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் செட்டி நொடி பள்ளம் என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனம் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வாகனம் என சாலையின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் கனரக வாகனம் நீண்ட வரிசையில் நின்றுள்ளன.

மேலும் சம்பவ இடத்திற்கு பவானி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் பாபு, சரவணன், நெடுஞ்சாலை ஆர்.ஐ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஜே.சி.பி. உதவியுடன் சாலையில் உள்ளமண் சரிவுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகி ன்றார்கள். நெடுஞ்சாலை துறையுடன் பர்கூர் காவல் துறையினரும் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News