உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கேட்டறிந்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்கிறது - அமைச்சர் பேட்டி

Published On 2022-07-09 10:26 GMT   |   Update On 2022-07-09 10:26 GMT
  • பல்வேறு வகையான புத்தகங்கள் லட்சக்கணக்கில் இடம்பெறும் வகையில் அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
  • அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக கண்காட்சி வரும் 15 -ம் தேதி தொடங்க உள்ளது.இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

புத்தக வாசிப்பை பெரியவர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களும் நேசிக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் ஆலோசனைப்படி தஞ்சை மாவட்டத்தில் வரும் 15 -ம் தேதி புத்தக கண்காட்சி தொடங்க உள்ளது.பல்வேறு வகையான புத்தகங்கள் லட்சக்கணக்கில் இடம் பெறும் வகையில் அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பபாசி அமைப்புடன் இணைந்து கண்காட்சி அமைப்பதால் சிறப்பாக அமையும்.

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த அரங்கமும் இடம்பெறும். கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் வரும் காரணத்தினால் முதலமைச்சரின் உத்த–ரவுப்படி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய–வேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளும் அரசின் விதிகளை கடைபிடிக்க வேண்டும்.இது குறித்து பல்வேறு பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக அரசு பள்ளி மற்றும் உதவிபெறும் பள்ளிகள் என இந்த ஆண்டு மொத்தமாக 9 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை தேடி வந்துள்ளனர்.

முதல்-அமைச்சர் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்தோடு அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். அதிகளவில் சேர்க்கை நடந்துள்ளது.இந்தாண்டு நீட் தேர்வுக்கு 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதே நேரத்தில் நீட் நுழைவு தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News