உள்ளூர் செய்திகள் (District)

நாகூர் சில்லடி கடற்கரை மற்றும் பேருந்து நிலையத்தை பொது கணக்கு குழுவிடம் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் கோரிக்கை அளித்தார்.

நாகப்பட்டினம் பகுதியில் சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு ஆய்வு

Published On 2022-12-29 09:08 GMT   |   Update On 2022-12-29 09:08 GMT
  • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கடற்கரை மற்றும் தர்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
  • அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. சில்லடி கடற்கரை மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் வருகை தந்த, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மற்றும் குழு உறுப்பினர்கள் நாகூர் சில்லடி கடற்கரை மற்றும் தர்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது, நாகூர் நகருக்கு பல்லாயிரக்கணக்கான ஆன்மீக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆனால் அதற்கேற்ற வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. சில்லடி கடற்கரை மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். மேலும் நாகையில் அரசு மேல் நிலைப்பள்ளி அமைப்பது, சட்டக்கல்லூரி தொடங்குவது, புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது, திருமருகல் தனி தாலுகா அமைப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்து, பொதுக் கணக்குக் குழு தலைவரிடம் ஷா நவாஸ் எம்.எல்.ஏ மனு அளித்தார்.

இந்தக் கோரிக்கைகளை அரசுக்கு பொதுக் கணக்குக் குழு பரிந்துரைக்கும் என்று செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தெரிவித்தார்.

Tags:    

Similar News