காரைக்கால்-தமிழக எல்லைகளில் சாராயம், மதுபான கடைகளில் சோதனை
- போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கார்கள், மீன் வண்டிகள் மற்றும் பஸ்களில் தீவிர சோதனை நடை பெற்றது.
காரைக்கால், மே.20-
தமிழக பகுதிகளில் அண்மையில் கள்ள ச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததையடுத்து, காரைக்கால்-தமிழக எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் தமிழக எல்லைகளில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. சோதனையின் போது, திரு.பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
சோதனையில், கனரக வாகனங்கள், கார்கள், மீன் வண்டிகள் மற்றும் பஸ்களில் தீவிர சோதனை நடை பெற்றது. குறிப்பாக, கனரக வாகனங்கள், 4 மற்றும் 2 சக்ர வாகனங்களில் மது மற்றும் சாராயம் கடத்தப்படுகிறதா என சோதனை நடைபெற்றது. தொடர்ந்து, எல்லையோர பகுதிகளில் உள்ள மதுபான கடைகள், சாராயக் கடை களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது, போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் கூறியதாவது:-
தனி நபருக்கு அரசு விதித்துள்ள அளவுக்கு மீறி மது பானம் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்க ப்பட்டால் அபராதத்துடன் கூடிய கடுமையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கடையில் பணிபுரியும் சில ஊழி யர்கள், மொத்தமாக தமிழக பகுதிக்கு மது கடத்த உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.