உள்ளூர் செய்திகள் (District)

உள்ளாட்சி பணியாளர் சங்கம் பி.டி.ஓ. விடம் மனு

Published On 2022-12-30 09:46 GMT   |   Update On 2022-12-30 09:46 GMT
  • உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் கோரிக்கை மனு அளித்தார்.
  • பணி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட முனிசிபல், டவுன் பஞ்சாயத்து , பஞ்சாயத்து பொதுபணியாளர்கள் சங்கம், கிராம பஞ்சாயத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்ளாட்சி சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நல்லம்பள்ளி பி.டி.ஓ. கவுரியிடம் உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வும், நிலுவை தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

15 ஆண்டுகளாக அடிசனல் டேங்க் ஆப்ரேட்டர்களாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு அரசு குறிப்பாணைப்படி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.பணி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

தூய்மை காவலர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மற்றும் பணி நேரம் தெரிவிக்க வேண்டும்.மேலும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, உபகரணங்கள், கையுறை, மாஸ்க், மழை கோட்டு வழங்க வேண்டும்.

பணியாளர்களுக்கு பணி பதிவேடு தொடங்கி பராமரிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

மனு அளித்த போது ஒன்றிய பொறுப்பாளர் முருகன், நிர்வாகிகள் தேவன், லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News