உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிஉதவியினை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.

பாதிக்கப்பட்ட 47 பேருக்கு ரூ5.83 லட்சம் நிதிஉதவி- கலெக்டர் வழங்கினார்

Published On 2023-06-08 08:52 GMT   |   Update On 2023-06-08 08:52 GMT
  • பாதிக்கப்பட்ட 47 பேருக்கு ரூ5.83 லட்சம் நிதிஉதவிகளை கலெக்டர் வழங்கினார்.
  • வருவாய் வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை திருமோகூரில் திருவிழாவின் போது நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை கலெக்டர் சங்கீதா நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கி உடல்நலம் விசாரித்தார்.

மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளுக்கு அதிகாரி களிடமிருந்து சேதமதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் 8 வீடுகள் சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.14,800/-மும், 34 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கரங்கள் (மொத்தம் 35 வாகனங்கள்) சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 200-ம், பாதிக்கப்பட்ட 4 நபர்களுக்கு நிதி உதவித் தொகையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும்– என மொத்தம் 47 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரிதோஷ் பாத்திமா , ஆதிதிராவிடர் நல அலுவலர் கோட்டூர் சாமி, கிழக்கு வருவாய் வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News