கஞ்சா விற்ற 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- கஞ்சா விற்ற 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
- ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.
மதுரை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, நாகமலை புதுக்கோட்டை, சேடப்பட்டி, ஆஸ்டின்பட்டி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்றதாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரிகளின் ரூ.7 கோடியே 3 லட்சத்து 51ஆயிரத்து 922 மதிப்பு உள்ள அசையா சொத்துக்கள், ரூ.8லட்சத்து 49 ஆயிரத்து 981 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்பட ரூ.7 கோடியே 12 லட்சத்து 1903 மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் தொடர்பு உடைய 205 பேரில், 109 பேரிடம் பிணைய பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது. இதில் ஒப்பந்த விதிகளை மீறியதாக 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா வியாபாரிகள் மட்டுமின்றி அவர்களின் 41 உறவினர்களுக்கு சொந்தமான 15 வீடுகள், இடம் மற்றும் 21 நிலங்கள், 5 கடைகள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகிய சொத்துக்களும் முடக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மற்றும் உறவினர்களின் அசையும்- அசையா சொத்துக்களும் முடக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தெரிவித்தார்.