உள்ளூர் செய்திகள்
வைகை ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர்களுக்கான நிவாரண முகாம்
- மதுரை வைகை ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர்களுக்கு நிவாரண முகாம் வழங்கப்பட்டது.
- இதனை கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வைகை ஆற்றில் வினாடிக்கு 7000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளது.
அங்கு இருந்தபடி கலெக்டர் அனீஷ்சேகர் வெள்ள பாதிப்புகளை கவனித்து வருகிறார். வெள்ள பாதிப்பில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோசாகுளம் பள்ளிக்கூடத்தில் மாதிரி தற்காலிக நிவாரண மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.