உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க. நிர்வாகி மற்றும் குடும்பத்தினர்.

அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 30 பேர் கைது

Published On 2023-10-09 09:10 GMT   |   Update On 2023-10-09 09:10 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றியுள்ளனர். எங்களுக்கு நீதி வேண்டும் என்றார்.

மதுரை

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விளாங்குடி 1-வது வார்டு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. வட்ட செயலாளர் மலைச்சாமி தனது குடும்ப உறுப்பினர்கள் 30 பேருடன் வந்தார். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் சினேகபிரியா மற்றும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து அனுமதி யின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மலைச்சாமி மற்றும் அவரது குடும்பத்தி னரை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மலைச்சாமி கூறுகையில், விளாங்குடி பகுதியில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். மேலும் நாங்கள் வளர்த்து வரும் மரங்கள் மற்றும் இடத்திற்கு உரிய வரி செலுத்தி வருகிறேன். ஆனால் தற்போது நீர்நிலை தொட்டி கட்டுவதாக கூறி இடத்தை கையகப்படுத்தி மரத்தையும் வெட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சம்பவத்தன்று போலீசார் எனது வீட்டுக்கு வந்து வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றி யுள்ளனர். எங்களுக்கு நீதி வேண்டும் என்றார்.

Tags:    

Similar News