உள்ளூர் செய்திகள்

வீர தியாகிகளின் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

வீர தியாகிகளுக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மரியாதை

Published On 2023-04-03 08:49 GMT   |   Update On 2023-04-03 08:49 GMT
  • அ.தி.மு.க. சார்பில் வீர தியாகிகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
  • ரூ.1.47 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டார்.

மதுரை

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூரில் ஆங்கி லேயரின் ஏகாதி பத்திய கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தது. இதில் 17பேர் ஆங்கிலேயரின் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்தனர்.

அந்த வீரதியாகிகளின் 103-வது நினைவு தினத்தையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், நத்தம், விசுவ நாதன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து வீர தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

இதில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், டாக்டர் சரவணன், மாநில பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கைரேகை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத் தில் ஆங்கிலேயர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 17பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த நிகழ்வு தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் என்று கருதப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 3-ந் தேதி, வீர தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, அ.தி.மு.க.சார்பில் அந்த தியாகி களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்யப் பட்டது. ஏற்கனவே அம்மாவின் ஆட்சி காலத்தில் இங்கு நினைவு தூண் அமைக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு, 100-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று, மணிமண்டபம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, இதற்காக ரூ.1.47 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நினைவு தினத்தை அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். நிச்சயம் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். அப்போது தமிழக அரசின் சார்பில் இந்த நினைவு நாளை அரசின் சார்பில், அரசு விழாவாக நடத்துவதற்கு உரிய அரசாணையை பிறப்பிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News