உள்ளூர் செய்திகள்
அய்யனார் கோவில் குதிரை எடுப்பு விழா
- சோழவந்தான் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
- இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் உள்ள அய்யனார், ஊர்க்காவலன், கொடிப்புலி கருப்புச்சாமி கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இந்த விழா 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மார்ச் 23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிராமத்தினர் குலவேளாளர்க ளிடம் சிலைகள் செய்வதற்கான பிடி மண் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேளாளர் வீட்டில் இருந்து சுவாமி, குதிரை சிலைகளை எடுத்து மேள தாளம் முழங்க வானவேடிக்கையுடன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து மந்தையில் வைத்தனர். இரவு கலை நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை சிலைகளை எடுத்து கோவிலை சென்றடைந்தனர். பின்னர் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை, கட்டையன், வாராமிலி கூட்டத்தினர் செய்திருந்தனர்.