சரண கோஷத்துடன் விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
- மதுரை கோவில்களில் சரண கோஷத்துடன் அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
- குருநாதர்கள் மூலம் துளசிமாலை அணிந்து கொண்டனர்.
மதுரை
கார்த்திகை மாதத்தில் அய்யப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். அய்யப்ப னுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் திர ளான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த அய்யப்பன் கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப் பட்டு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இதில் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு கோவில் தலைமை குருக்கள் துளசி மாலை அணிவித்தார். மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள கோவிலுக்கு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதேபோல் புதூரில் உள்ள அய்யப்பன் கோவி லிலும் திரளான பக்தர்கள் குவிந்து மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். காளவாசல் அய்யப்பன் கோவில், ரெயில்வே காலனியில் உள்ள அய்யப்பன் கோவில், விளாச் சேரியில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அழகர்மலை யில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் பழமு திர்ச்சோ லை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து மாலை அணிந்து கொண்ட னர். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், நேதாஜி ரோட்டில் உள்ள தண்ட பாணி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர். சிலர் குரு நாதர்கள் மூலம் தங்கள் வீடுகளிலேயே மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
முன்னதாக நேற்று மதுரையில் உள்ள கடை வீதிகளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காவி, கருப்பு, நீல நிற ஆடைகள், துளசி மாலை வாங்க குவிந்தனர்.