உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான மானையும், நாய் கடித்ததில் காயமடைந்த மானையும் படத்தில் காணலாம்.

வாகனம் மோதி மான் பலி

Published On 2022-08-02 08:33 GMT   |   Update On 2022-08-02 08:33 GMT
  • வாகனம் மோதி மான் பலியானார்.
  • பின்னர் ராயபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு கட்டி வைத்தனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே ராயபாளையம், சமத்து வபுரம், சிவரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இரை தேடி வரும் மான்கள் நாய்களால் வேட்டையாட பட்டும், சாலை விபத்தில் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ராயபாளையம் கிராமத்தில் இரை தேடி வந்த 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமானை அப்பகுதியில் இருந்த நாய்கள் துரத்தி கடித்தன. இதை கண்ட கிராம மக்கள் நாய்களை துரத்திவிட்டு மானை மீட்டனர். பின்னர் ராயபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு கட்டி வைத்தனர்.

இதுபற்றி சாப்டூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனவர் ஜெய்சங்கர் தலை மையிலான வனத்துறை அலுவலர்கள் வந்து கயமடைந்த மானுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதேபோல் திருமங்கலம் -விருதுநகர் 4 வழிச்சாலையில் மேலக்கோட்டை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஊரணியில் தண்ணீர் அருந்திவிட்டு சாலையை கடக்க முயன்ற ஒரு புள்ளி மான் விபத்தில் பலியானது. இந்த புள்ளிமான் விருதுநகரில் இருந்து மதுரைக்குச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. இது பற்றி தகவல் கிடைத்தது. சாப்டூர் வனவர் ஜெய்சங்கர் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் மானை மீட்டு பிேரத பரிசோதனைக்கு கொண்டுச்சென்றனர்.

திருமங்கலம் அருகே ஒரே நாளில் நாய்கள் கடித்து ஆண் புள்ளிமான் காயமடைந்த சம்பவமும், வாகன விபத்தில் சிக்கி பெண் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல் திருமங்கலம் பகுதியில் வனச்சரகம் அமைத்து வனவிலங்குகளை காக்க வேண்டும் என்று கூறினர்.

Tags:    

Similar News