உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த ேபாது எடுத்த படம்.

சிதிலமடைந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்

Published On 2023-07-13 07:49 GMT   |   Update On 2023-07-13 07:49 GMT
  • சிதிலமடைந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
  • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தினார்

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திரு மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல் கின்றனர். இங்குள்ள பழமையான கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படு கின்றன. நேற்று கான்கிரீட் சுவரின் பூச்சு இடிந்து விழுந்ததில் வார்டில் தங்கி இருந்த நோயாளிகள் பீதி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான உதய குமார் ஆஸ்பத்திரியில் நேரடி ஆய்வு மேற் கொண் டார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோ றும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆனால் மருத்துவமனையில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந் துள்ளது. 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மருத்துவமனையை சீரமைக்க அரசு போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை.

ரெயில்வே கேட் மூடப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி யை காப்பாற்ற முடியாமல் போனது துரதிஷ்டவசமானது. எனவே அந்த பகுதி யில் மேம்பாலத்தை உடனடி யாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News