மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
- கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்றார்.
- போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மதுரை
மதுரை கலெக்டர் அலுவ லகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகி றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் நேரடியா கவோ, மனுக்கள் மூலமா கவோ தெரிவிப்பார்கள்.
அதன்படி இன்று கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஏராள மானோர் மனு கொடுக்க நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த பொது மக்கள் மற்றும் போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இது தொடர்பாக போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி னர்.
அப்போது அவர் பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த சிறுமணி மகள் கவிதா, மாற்றுத்திறனாளி என தெரியவந்தது. இவரது குடும்பத்தினர், அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நடத்தி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக ரூ.4 லட்சம் அபராதம் கட்டவில்லையென்றால் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக மிரட்டுகின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.