51 அடி உயர கொடிக்கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்-எம்.எல்.ஏ அறிக்கை
- நாளை மதுரைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றுகிறார்.
- ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
1½ கோடி தொண்டர் களின் எண்ணத்தை நனவாக்கும் வகையில், கழக பொதுக்குழு உறுப்பினர் களால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுத லோடு அ.தி.மு.க சிறப்பாக பணியாற்றி வருகிறது. அம்மா வழியில் சட்ட போராட்டம் நடத்தி, துரோகிகளின், விரோதி களின் சதி செயல்களை முறியடித்து, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வெற்றி யின் சின்னமான இரட்டை இலையை மீட்டெடுத்து உள்ளார்.
அ.தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றி வரலாறு படைக்கும் வகையிலும், இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையிலும் நாளை (10-ந்தேதி) மதியம் 1 மணிக்கு இடைக்கால பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி, தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள, கூத்தியார் கூண்டு பகுதியில் 51 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் கழக கொடியினை ஏற்றி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா (நான்) தலைமை தாங்குகிறேன். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ராஜ் சத்யன் ஆகியோர் வரவேற்புரையாற்று கிறார்கள். பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், மேளதாளம் முழங்க, தாரை தப்பட்டை எதிரொலிக்க, பெண்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் மட்டுமல்லாது, பொது மக்களும் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.