உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை
- உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விற்பனை வரி ஆலோசனைக்குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும்.
மதுரை
தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மதுரையில் இன்று சமா தான் திட்ட விளக்கக் கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, வணிக வரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, கலெக்டர் சங்கீதா, வணிக வரித்துறை ஆணை யாளர் ஜெகன் நாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வேல் சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்பிரமணியம், ஆலோசகர் ஜெயபிரகாசம், துணை தலைவர் ஜெயகர், செயற்குழு உறுப்பினர் திருமுருகன் ஆகியோர் அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சமாதான் திட்டத்தில் சேர்வதற்கான கால வரம்பான 31.3.2021 என்பதை மாற்றி 31.10.2023 வரை நிலுவையில் உள்ள ஆணைகளுக்கும் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் அதிக வணிகர்கள் பயனடை வார்கள். அதிக மேல்முறையீடு வழக்குகள் தீர்வு காணப்படும்.
மதுரை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட விற்பனை வரி ஆலோசனைக்குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். அதில் எங்கள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் அப்பளத்திற்கு வரி இல்லை என்ற தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
25 கிலோவிற்கு மேல் பேக் செய்து விற்கப்படும் வெல்லத்திற்கு வரி உண்டா? என்பதை விளக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.