எடப்பாடி பழனிசாமிக்கு நான் தூது விடவில்லை-ஓ.பி.எஸ்.பேட்டி
- முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை வந்தார்.
- பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக தேர்தல் ஆணையமும், எடப்பாடி பழனிசாமியும் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
மதுரை
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை வந்தார். அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி, நான் அவருக்கு தூது விட்டதாக கூறுவது அண்ட புழுகு, ஆகாச புழுகு. நான் அவருக்கு தூது விடவில்லை. திருச்சியில் நடத்தியது போல வேறு இடங்களிலும் மாநாடு நடத்தப்படும். விரைவில் அடுத்த மாநாடு குறித்த தகவலை வெளியிடுவேன்.
பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விக்கு தேர்தல் ஆணையமும், எடப்பாடி பழனிசாமியும் தான் பதில் சொல்ல வேண்டும். அது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஓ.பன்னீர் ெசல்வத்தை மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.கோபால கிருஷ்ணன், முரு கேசன் மற்றும் மாநில இளைஞரணி வி.ஆர்.ராஜ்மோகன், கனிஷ்கா சிவக்குமார், கருப்பையா, கண்ணன், கிரி, மகாலிங்கம், வி.கே.எஸ்.மாரிச்சாமி, ஊராட்சி தலைவர் முத்தையா, மனோகரன், அர்ஜூனன், ஜெயக்குமார், ராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.