ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை மனு
- ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை மனு ஐ.ஜி.யிடம் வழங்கப்பட்டது.
- வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
மதுரை
கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக முழு வதும் மாணவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி னர்.
இந்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று ஜல்லிக்கட்டு வழக்கு முறி யடிப்பு குழுவினர் மதுரை யில் உள்ள தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில்
ஜல்லிக்கட்டு போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் மற்றும் சாமா னியர்கள். அவர்களால் தொடர்ந்து வழக்கை எதிர்கொள்ள முடியாத பொருளாதார நிலை இருப்பதால் அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.