உள்ளூர் செய்திகள்
- சடையாண்டி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பூசாரி தவமணி, கிராம சேர்வை வகையறாக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சோழவந்தான்
விக்கிரமங்கலம் அருகே எட்டுமூலைபட்டி கிருஷ்ணாபுரத்தில் உள்ள சடையாண்டி, கன்னிமார் கோயிலில் கும்பாபிஷேக விழா பூசாரி பெரியகருப்பன் தலைமையில், சிவாச்சாரியார் ஹரிஹரசந்தோஷ் முன்னிலையில் விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி 3 கால பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து மூலவர் நடு கல்லிற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். மூலவருக்கு 12 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூசாரி தவமணி, கிராம சேர்வை வகையறாக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.