மதுரை மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டராக சங்கீதா இன்று பொறுப்பேற்பு
- மதுரை மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டராக சங்கீதா இன்று பொறுப்பேற்றார்.
- தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர்.
மதுரை
தமிழக அரசு அண்மை யில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாவட்ட கலெக்ட ராக இருந்த அனீஷ் சேகர் இடமாற்றம் செய்யப்பட்டு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
வணிக வரித்துறை இணை கமிஷனராக இருந்த சங்கீதா மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப் பட்டார். அவர் இன்று மதுரை கலெக்டர் அலுவல கத்தில் கோப்பில் கையெ ழுத்திட்டு கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண் டார்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம் பட்டியை சேர்ந்த சங்கீதா, தமிழக அரசின் குரூப் 1 அலுவலராக பணி நியமனம் பெற்று, 2016 -ம் ஆண்டு பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றார். அதன்பின் தற்போது மதுரை மாவட்ட கலெக்டராக சங்கீதா பொறுப்பேற்று உள்ளார்.
மதுரை மாவட்ட கலெக்டராக சந்திரலேகா 1984-85-ம் ஆண்டிலும், கிரிஜா வைத்தியநாதன் 1991-92-ம் ஆண்டிலும் பணிபுரிந்துள்ளனர். தற்போது மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டராக சங்கீதா பொறுப்பேற்று உள்ளார்.