காந்தி மியூசியத்தில் அஸ்திக்கு மலர்தூவி பொதுமக்கள் அஞ்சலி
- காந்தி மியூசியத்தில் அஸ்திக்கு மலர்தூவி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
- ஜப்பான் மொழியில் காந்தியின் புகழை கூறும் பாடலை இசைக்கருவி மூலம் வாசித்தார்.
மதுரை
மதுரையில் மகாத்மா காந்தியின் நினைவை போற்றும் வகையில் காந்தி மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காந்தியின் வரலாற்று தகவல்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.
காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடை, அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு காந்தியின் அஸ்தி பீடம், காந்தியின் சிலை உள்ளது. காந்தியின் வாழ்க்கையில் மதுரை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள மக்களை பார்த்ததும் அவர் தனது ஆடைகளை குறைத்து கொண்டார். இங்குள்ள விவ சாயிகள் போல் ஆடைகளை அணிய தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தி யின் 75-வது நினைவு நாளையொட்டி இன்று காந்தி மியூசியத்தில் அவரது சிலைக்கு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ், இத்தாலி நாட்டி லிருந்து வந்த மாசிலோனா, லோரா உள்ளிட்ட வெளி நாட்டு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
ஜப்பான் நாட்டு புத்த பிட்சு மஸ்தாவோ இஸ்தானி காந்தி சிலையின் காலில் விழுந்து வணங்கி மரியாதை செய்தார். அதன் பிறகு ஜப்பான் மொழியில் காந்தியின் புகழை கூறும் பாடலை இசைக்கருவி மூலம் வாசித்தார்.