உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-10-01 09:18 GMT   |   Update On 2022-10-01 09:18 GMT
  • மதுரை திருப்பாலை யாதவா பெண்கள் கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அவனியாபுரம்

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள யாதவா பெண்கள் கல்லூரியில் தமிழக அரசு மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அனிஷ்சேகர் தலைமையில் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மதுரை மாவட்டத்தில் மட்டும் 58 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 3 இடங்களில் இது போன்று சிறப்பு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து செய்யக்கூடிய முதல்வராக இருக்கிறார். இந்த 16 மாத காலங்களில் எந்த பணியாக இருந்தாலும் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வெங்க டேசன் எம்.பி, மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், ஒன்றிய சேர்மன் வீரராகவன், பகுதி செயலாளர்கள் சசி குமார், மருது பாண்டி, திருப்பாலை ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஜீவா உள்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News