மருத்துவமனையில் மாணவர்களுக்கு ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல்
- மருத்துவமனையில் மாணவர்களுக்கு ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல் கூறினார்.
- மருத்துவ அதிகாரியிடம் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டது. மாண வர்களுக்கு தனிக்கவனம் செலுத்துமாறு கூறி உள்ளோம்.
மதுரை
திருமங்கலத்தில் பூவரசம் மரத்தின் பழக்கொட்டையை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து, பெற்றோர்க ளுக்கு ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பிஸ்கட், ரொட்டி, பழங்கள், நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார். பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
திருமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத் துக்குள் உள்ள பூவரசம் மரத்தின் பழக் கொட்டை களை சாப்பிட்டனர்.
பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்ற அவர்கள் அங்கு மயக்கம் அடைய தொடங்கினர். உடனடியாக பெற்றோர்கள் அவர்களை திருமங்கலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். தரணிதரன், பாலாஜி, கோகுல பிரசாத் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாண வர்கள் மருத்துவமனையில் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர்.
இவர்களில் பாலாஜி, கோகுலபிரசாத் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவ அதி காரியிடம் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டது. மாண வர்களுக்கு தனிக்கவனம் செலுத்துமாறு கூறி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.