உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2022-08-19 08:37 GMT   |   Update On 2022-08-19 08:37 GMT
  • அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
  • மருத்துவ–மனையில் தேவையான மருத்துவர்கள், செவிலி–யர்களை நியமிக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்கள் நல்வா–ழ்வுத்துறை அமைச்சர் இன்று மதுரை வந்துள்ளார். அவர் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.த்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் எப்போது தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தென் மாவட்ட மக்களுக்கு இந்த பணி எப்போது தொடங்கும் என இனிப்பான செய்தியை வழங்க அமைச்சர் முன் வர வேண்டும். அதேபோல் மருத்துவமனையை ஆய்வு செய்யும்போது தேவையான உபகரணங்களை வழங்க நிதி ஒதுக்க வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து செவிலியர்கள் சேவையாற்றினர். அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.அவர்களுக்கு என்ன திட்டம் உள்ளது? என்று அரசு விளக்க வேண்டும். அவர்களின் எதிர்காலம் குறித்த அரசு நடவடிக்கையை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை, பேரையூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும், பேரையூர் மருத்துவ–மனையில் தேவையான மருத்துவர்கள், செவிலி–யர்களை நியமிக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது டெங்கு ஒழிப்பு குறித்த முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அரசு கூறி வருகிறது. அது குறித்து முழுமையான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும்.சாமானிய மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை மீண்டும் கொண்டுவர அரசு முன்வருமா? என்று அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News