சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
- முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு கோட்டபொறியாளர் (பொறுப்பு) வரலட்சுமி, உதவிக்கோட்டபொறியாளர் சாந்தினி, உதவிபொறியாளர்கள் காவியமீனா, கீதா ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் பற்றி விளக்கி பேசினர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.
இதில் ஆசிரியர்கள் தங்கழகு, விவசாயஆசிரியர் சுரேஷ், ஸ்டாலின், கணினிஆசிரியர் செந்தில்குமரன் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.