- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநாடு நடந்தது.
- சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனோகரன் தலைமை தாங்கினார். இதில் சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் சலவை படி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும், இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நெடுஞ்சாலை துறையிலே பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநில நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் சந்திரபோஸ், மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் தமிழ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.