உள்ளூர் செய்திகள்

கத்திமுனையில் 2 பேரிடம் வழிப்பறி; 5 பேர் கைது

Published On 2023-05-19 08:50 GMT   |   Update On 2023-05-19 08:50 GMT
  • கத்திமுனையில் 2 பேரிடம் வழிப்பறி; 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கத்திமுனையில் 2 பேரிடம் வழிப்பறி; 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

திண்டுக்கல் மாவட்டம் சிலவத்தூர் குமரன் திருநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செல்வகுமார் (வயது 34). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் அந்த கும்பல் செல்வகுமார் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பியது.

இந்த சம்பவம் குறித்து செல்வகுமார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் வழிப்பறியில் ஈடுபட்டது மேல பொன்ன கரம் கொம்பமுத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் கார்த்திக் (20), அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் பாண்டி (23), முத்துக்குமார் மகன் கோபிநாதன் (21), பாண்டி மகன் மணிகண்டன் (23) என தெரியவந்தது. இதை யடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கத்தியை பறிமுதல் செய்த னர்.

அண்ணா பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் முன்பாக நின்று கொண்டி ருந்தார். அப்போது இஸ்மாயில்புரம் 10-வது தெருவை சேர்ந்த கரிகாலன் மகன் பாஸ்கரன் (30) என்பவர் கத்தி முனையில் மிரட்டி ரூ. 200-ஐ வழிப்பறி செய்தார். இந்த சம்பவம் குறித்து கண்ணன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் பாஸ்கரனை கைது செய்தனர்.

மதுரையில் இருந்து வெளியூர் செல்பவர்களும், வெளியூர்களில் இருந்து மதுரைக்கு நள்ளிரவு வரும் பயணிகளை மிரட்டி நகை, பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

மாட்டுத்தாவணி, பெரி யார், ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் சமூக விரோதிகள் மறைந்திருந்து இரவு நேரத்தில் தனியாக வருபவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுகின்ற னர். இதனால் வெளியூர்க ளில் இருந்து நள்ளிரவு ஊர் திரும்புபவர்கள் பீதியுடன் வீடுகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

எனவே போலீசார் மேற்கண்ட பகுதிகளில் கூடுதல் ரோந்து சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News