நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்
- நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
- பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளை ஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் ஆலோசனையின்படி இன்று மதுரை திருப்பாலை குறிஞ்சி மகாலில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக நீட்தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் ஜனாதிபதிக்கு தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கையெழுத்திட்டனர்
இந்த கையெழுத்து இயக்கத்திற்கு இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் ஜி.பி.ராஜா, வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலை மை வகித்தனர். தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் முன்னாள் எம்.பி., கம்பம் செல்வேந்திரன் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் பால சுப்பிர மணி யன், சோம சுந்தரபாண்டியன், நேரு பாண்டி, சசிகுமார், வீரராக வன், வாடிபட்டி பால் பாண்டி, சிறை செல் வன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் வைகை மருது, இளங்கோ, குமரேசன், மற்றும் கவுன் சிலர் ரோகினி பொம்மத் தேவன், பேரூ ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.