பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
- அவனியாபுரத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- போக்குவரத்து காவல்துறை சார்பில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அவனியாபுரம்
மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாணவன் பிரபாகரன் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்து பலியானார். இதையடுத்து போக்குவரத்து காவல்துறைதுணை ஆணையர் ஆறுமுகசாமி, கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார், உதவி போக்குவரத்து காவல் ஆணையர் செல்வின் ஆகியோரது அறிவுரையின்படி மதுரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அவனியாபுரம் பெரியார் சிலை முன்பு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தங்கபாண்டியன், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்க வைத்தார். இதில் ஆர்.டி.ஓ. சித்ரா, திருப்பரங்குன்றம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பூர்ணா கிருஷ்ணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கண்ணன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன், போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வம், காவலர்கள் அழகு முருகன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.