- பெண் டிரைவர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுஉள்ளது.
- மேற்கண்ட தகவலை மதுரை, தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.
மதுரை
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நல வாரியம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதில் 18- 60 வயதுக்கு உட்பட்டோர் பதிவு செய்து கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை- விபத்து மரண உதவித்தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை பெறலாம். இது தவிர பெண் டிரைவர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுஉள்ளது.
எனவே 60 வயது பூர்த்தி அடையாத பெண்கள் நலவாரிய உறுப்பினர் பதிவு அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வருமானவரி சான்றிதழ், விலைப்புள்ளி விபரப் பட்டியல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான படிவத்தை https://tnuwwb.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மதுரை எல்லீஸ் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணில் (0452-2601449) தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை, தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.